
செய்தியாளர் : விஜய்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு செம்மறி ஆடு மற்றும் மாடுகளை குர்பானியாக வழங்குவது வழக்கமாக உள்ளது.

இதுபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித், மதார் மரைக்காயர் பள்ளி, காதிரிய்யா மதரஸா, திவான்ஷா பள்ளி தெரு பள்ளி, செய்யது பள்ளி, ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், பாத்திமா பள்ளி மற்றும் தோழை சாஹிப் தைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

