
செய்தியாளர்: ஜேசுராஜ்
விக்கிரமங்கலம், மே 28:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மொபட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் இன்று விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ‘வி. கைகாட்டி’ பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வந்த ஒரு மொபட்டை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், மொபட்டில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (45), ரமேஷ் (44) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<b> Total Views: 11 </b>

