துறையூரில் தானிய சேமிப்புக்கு புதிய வசதி – 7,500 மெட்ரிக் டன் வாடகை கிடங்கு திறப்பு

திருச்சி

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார்

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக்கிடங்கை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள இந்த தானியக்கிடங்கில் நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும்.

நிகழ்ச்சியில் தனியார் கிடங்கு உரிமையாளர்கள், வாடகை உணவு தானியக்கிடங்கிற்கான ஒப்புதல் பத்திரத்தை அமைச்சர் வெங்கட்ரமணனிடம் வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் வெங்கட்ரமணன் பேசுகையில், இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது தானியங்களை போதிய சேமிப்பு வசதியின்றி வெளிப்புறங்களில் வைத்து சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் தனியாருக்கு சொந்தமான கிடங்குகளை வாடகைக்கு பெற்று நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனியார் வாடகை தானியக்கிடங்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தானியங்கள் மற்றும் நெல், டெல்டா பகுதிகளில் இருந்து பெறப்படும் நெல் மற்றும் அரிசி உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்க இந்த கிடங்கு பயன்படும். இந்த கிடங்கு நாளை முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சேமிப்பு கிடங்கு உரிமையாளர் செல்வம், மண்டல மேலாளர் குமரவேல், தரக்கட்டுப்பாடு மேலாளர் அன்புராஜா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், தாசில்தார் சித்ரா, செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் ராஜு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், துறையூர் நகர செயலாளர் வினோத்குமார், துறையூர் வடக்கு நகர செயலாளர் சூர்யா, துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா, துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஒன்றிய செயலாளர் சுதாகர், தொகுதி பொறுப்பாளர் சதா, ஓட்டுநர் செந்தில்குமார், டெக்னீசியன் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *