அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சிபிஐ கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்

அரியலூர்

அரியலூர், ஆக.11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி வரவேற்றார். கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், ஆறுமுகம், மருதமுத்து, எஸ்.ஆனந்தன், ரமேஷ், சிவக்குமார், து.பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு நடைபயண மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய இரா.முத்தரசன், அனைவருக்கும் சம வாய்ப்பு, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் மூலம், பாஜக அரசின் ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டில் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா.முத்தரசன் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *