கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

அரியலூர்

 

செய்தியாளர்: ஜேசுராஜ் 

விக்கிரமங்கலம், மே 19 –

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி நோக்கி வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை செய்ய முயன்றனர்.

இதனை கண்ட மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர், வண்டியை சாலையோரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் ஏற்றியிருந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

<b> Total Views: 3 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *