
அரியலூர்: அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் ‘ஸ்டார் எக்ஸ்போ 2026’ கண்காட்சி டி.டி.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் தொழில் முனைவோர் பங்கேற்று தங்களது தயாரிப்புகளுக்கான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர்.
பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் ‘மகளிர் தொழில் முனைவோர் சாதனையாளர் 2026’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான தாமரை எஸ். இராஜேந்திரன், 50 பெண் தொழில் முனைவோருக்கு ‘சாதனையாளர் 2026’ விருதுகளை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் தாமரை எஸ். இராஜேந்திரனை, அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநரும், அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்க ஆலோசகருமான சோபனா பன்னீர்செல்வன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் நா. பிரேம்குமார், நகர அதிமுக செயலாளர் ஏ.பி. செந்தில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நளினி, சித்ரா, அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மரகதம்மாள், நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா, அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர் சோபனா பன்னீர்செல்வன், யோகா பயிற்சியாளர் ஹரிபிரசாத் மற்றும் பெண்கள் தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் தேவிகா, சூர்யா, விஜிப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

