துறையூர் லோக் அதாலத்தில் விபத்து வழக்குக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடந்த 2024-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்தார். விபத்தில் அவரது வலது கால் அகற்றப்பட்டு, மாற்றுத்திறனுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு, மருத்துவச் செலவு மற்றும் வாழ்வாதார இழப்பு உள்ளிட்டவற்றுக்காக துறையூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தேசிய லோக் அதாலத் இன்று (செப்.12) துறையூரில் நடைபெற்றது.

லோக் அதாலத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பாலமுருகனின் வயது, உடல் பாதிப்பு, எதிர்கால வாழ்வாதாரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, Go Digit நிறுவனத்துடன் சமரச அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பாலமுருகனுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த வழக்குக்கு லோக் அதாலத் மூலம் தீர்வு கிடைத்தது.

இந்த நிகழ்வில் விஜய் கார்த்திக் சார்பு நீதிபதி, நீதிபதி அன்பு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்குமார், செயலாளர் செல்லதுரை மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 5 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *