
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து

துறையூரில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். முசிறி சரக டிஎஸ் பி முத்துக்குமார் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மற்றும் முசிறி தொட்டியம் தா.பேட்டை உப்பிலியபுரம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி சாலை பாலக்கரை சிலோன்ஆபீஸ் ஆஸ்பத்திரி சாலை வழியாகஜ கொடி அணி வகுப்பாக சென்று மீண்டும் ஊர்வலம் காவல் நிலையத்தை வந்தடைந்தது.


