பெரம்பலூர்: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தேர்தல் ஆதரவு – ஏப்ரல் 12ல் அறிவிப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர், ஏப். 1:
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் தொகுதியில் சுமார் 45,000 தேவேந்திரகுல வேளாளர் வாக்காளர்கள் உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக மற்றும் ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது சமூகத்தினருக்கு உரிய அரசியல் வாய்ப்புகளை வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாவட்டச் சேர்மன், ஒன்றியச் சேர்மன் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலும் சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சமூகத்தினரிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், துறையூர் சட்டமன்ற தொகுதியிலும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிக அளவில் உள்ள நிலையில், இம்முறை அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லாத வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒரே சமூகத்தினருக்கே வாய்ப்பு வழங்கி வருவது கவலைக்குரியது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களது ஆதரவை எந்தக் கட்சிக்கு வழங்குவது என்பது குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி அறிவிக்க தீர்மானித்துள்ளதாக ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *