
அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் தாமரை எஸ். ராஜேந்திரன், நெல் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, விவசாயிகளிடம் அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி இளவரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கல்லங்குறிச்சி சு. பாஸ்கர், மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமுருகன், ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராசு, முன்னாள் அரசு வழக்கறிஞர் இராமகோவிந்தராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செல்வாம்பாள், பாமக மாவட்டத் துணைத் தலைவர் குறிச்சி வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

