அரியலூர் அரசு கலைக் கல்லூரி 56வது பட்டமளிப்பு விழா

அரியலூர்

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் 56 – ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சே. சித்ரா விழாவிற்கு தலைமை வகித்தார். .

விழாவில் சிறப்பு விருந்தினராக,
தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.குணசேகரன்
கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் 241 மாணவர்கள், 610 மாணவியர்கள் என 851 நபர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பல்கலைக் கழக அளவில்,முதுகலை வரலாற்றுத் துறை மாணவர்ஆர்.வெங்கடேசன்,பல்கலைக்கழக அளவில் 2 வது இடமும் முதுகலை வரலாற்றுத் துறை மாணவி இ.கீதா பல்கலைக் கழக அளவில் 7 ஆம் இடமும் முதுகலை வரலாற்றுத் துறை மாணவிவி.ஷோபனா பல்கலைக்கழக அளவில் 19 வது இடமும்,இளநிலை சுற்றுச்சூழல் அறிவியல் மாணவர் எ.ராஜேஷ்குமார் பல்கலைக்கழக அளவில் முதலிடமும் இளநிலைஅறிவியல்புள்ளியியல் மாணவி கே.அகல்யா பல்கலைக்கழக அளவில் 5 வது இடமும் இளநிலை அறிவியல்தாவரவியல் மாணவி பி.மீனாபல்கலைக்கழக அளவில் 10 வது இடமும் இளநிலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர் ஆர். முத்துக்குமார் பல்கலைக்கழக அளவில் 3 வது இடமும் பெற்று கல்லூரிக்குப் பெருமைசேர்த்தனர்.
வேதியியல் துறை மாணவர் த. கோம துரை முனைவர் பட்டம் பெற்றார்.
இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *