
செய்தியாளர்:பாலசுப்பிரமனியன்
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப் பட்டது.மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் பிறந்த ரெட் கிராஸ் நிறுவனரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக உலக நாடுகளால் அனுசரிக்க ப்பட்டுகிறது.ஜீன் ஹென்றி டுனாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் இலவச நீர் மோர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கிளையின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்பின் சார்பில் நிர்வாகி கள் அனைவரும் ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
நகராட்சி முதன்மை சுகாதார ஆய்வாளர் அந்தோணி ஸ்டீபன், மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் உலக நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்மோர் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், சங்கத்தின்
மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் சண்முகம் , மாவட்ட பொருளாளர்எழில்,முன்னாள் தலைவர் நல்லப்பன், துணைப் புரவலர் பனங்கூர் கதிர். கணேசன்,துணைப் புரவலர் சகானா காமராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவபாக்கியம் அம்சவள்ளி,சிவசங்கர், ஆயுள் உறுப்பினர் சடையப்பன், அமுதா, தன்னார்வலர் சரவணன், ஆண்டினிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 2000 பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி சிறப்பித்தனர்.

