
செய்தியாளர்: ஜேசுராஜ்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற புகையிலை பொருட்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 495 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் மன்றத்தின் உத்தரவின்பேரில், அந்த புகையிலை பொருட்களை அழிக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. தா. பழூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பூபதி, விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் அம்பாபூர் ஊராட்சி எழுத்தர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில், ஆலவாய் கல்லாமேடு பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு அதனுள் புகையிலை பொருட்கள் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது.
பின்னர், அவை பொக்லின் இயந்திரம் மூலம் மண்ணால் மூடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
<b> Total Views: 17 </b>

