
செய்தியாளர் ; ஜேசுராஜ்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரியலூரில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். சம்பவத்தன்று காலை பயிற்சிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாத்தா விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (19) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தாராபுரம் சென்ற போலீசார், குப்புராஜ் மற்றும் சிறுமியை மீட்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குப்புராஜை கைது செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
<b> Total Views: 12 </b>

