
செய்தியாளர் : அருண் – 90959 25936
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூகநலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்து, ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மருத்துவ முகாமில் பங்கேற்ற 11 வயது சிறுமி தர ஸ்ரீ, முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவதிப்பட்டு வருவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு உடனடி உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துணை சபாநாயகர் ரவிசங்கர் பரிந்துரை செய்தார்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சமூகநல நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
<b> Total Views: 42 </b>

