446 மனுக்கள்.. உடனடி நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு!

நாகப்பட்டினம்

 

செய்தியாளர் : விஜய்

நாகப்பட்டினம், ஜூலை 13:

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ. அரங்கநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரா. ராமலிங்கம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *