
திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை…
சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை
கடித்துக் குதறிய எலிகள் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா ?
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்குக் (MGMGH) கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில்
தமிழ்க்கொடி காலில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், அவரது காலில் காயம் இருந்த பகுதியைத் தின்று கடித்துக் குதறியுள்ளன.
அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலிகள் கடித்தது தெரியவில்லை.சக நோயாளிகள் கூறிய பிறகே எலி கடித்தது குறித்து அவருக்கு தெரிந்துள்ளது.இதுகுறித்து மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
<b> Total Views: 30 </b>

