கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நாகப்பட்டினம்

 

வேதாரண்யம் காவல் நிலைய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

நாகப்பட்டினம், 08.10.2026:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேதாரண்யம் காவல் நிலையத்தில் Cr.No.285/2013, U/s 302 IPC r/w 34 IPC என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் புஷ்பவனம், பூவாலி தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமியின் மகன் தனுஷ்கோடி (33/26) என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவாளி தனுஷ்கோடிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும் விதித்து 08.10.2026 அன்று தீர்ப்பு வழங்கியது.

குற்ற வழக்குகளில் திறம்பட விசாரணை மேற்கொண்டு, உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கைகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *