பெரம்பலூரில் அதிமுக வேட்பாளருக்கு நாயுடு கூட்டமைப்பு முழு ஆதரவு அறிவிப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர், ஏப். 2:

தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் (MA, முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் முழு ஆதரவும் அதிமுக வேட்பாளருக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன் மற்றும் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாயுடு கூட்டமைப்பின் இந்த ஆதரவு அறிவிப்பு, பெரம்பலூர் தொகுதியில் அதிமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *