அமைச்சர் சிவசங்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் அன்னதானம், இனிப்பு வழங்கல்

அரியலூர்: மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   இதனை முன்னிட்டு தொமுச நிர்வாகிகள் சார்பில் சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அவரது நலனுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.   தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக, ராஜாஜி நகரில் செயல்படும் சாந்தம் முதியோர் இல்லத்தில் […]

Continue Reading

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

  தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் போராட்டம்.     திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என நத்தமாடி கிராம விவசாயிகள் அஞ்சுகின்றனர். விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி […]

Continue Reading

திருச்சி:1200 நாணயங்கள் – 200 பணத்தாள்கள் சேகரிப்பு: 7ம் வகுப்பு மாணவன் உலக சாதனை

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் மாரி விக்னேஷ், உலக நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை சேகரித்து உலக சாதனை படைத்துள்ளார். சுப்பிரமணி – முத்துமணி தம்பதியினரின் மகனான மாரி விக்னேஷ், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்களை பார்த்ததில் ஏற்பட்ட ஆர்வம், இவரை நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பில் ஈடுபடச் செய்தது.     கடந்த நான்கு ஆண்டுகளில் […]

Continue Reading

துறையூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் காவலர்கள் கார்த்திக், நடராஜன், அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.5 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Continue Reading

அரியலூர் அருகே மூதாட்டி மர்ம மரணம்: 15 பவுன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

    விக்கிரமங்கலம், மார்ச். 21 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்ததுடன், அவரிடமிருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விக்கிரமங்கலம் அடுத்துள்ள பெரிய திருக்கோணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (72). இவரது கணவர் துரைசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். ராஜலட்சுமி தனது பேரனான வசந்த் (35) என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை, […]

Continue Reading

திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை தி – ஐ- பவுண்டேஷன் மருத்துவமனை சாதனை

திருச்சி மார்ச் 17 திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை – தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர் சாதனை மார்ச் மாதம் 2வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண்ணி நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் […]

Continue Reading

தேர்தல் அதிரடி: பெரம்பலூரில் ரூ.1.37 லட்சம் ரொக்கம் மற்றும் 6 மிக்ஸிகள் பறிமுதல்!

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, நேற்றைய தினம்(மார்ச் 17), பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில். கீழ்கண்டவாறு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் காலை 08.30 […]

Continue Reading

துறையூர் அருகே அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது சிறுவன் பலி

  திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் வயது 34 இவரது மனைவி திவ்யா இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள் இவருடைய மகன் பிரஜன் வயது 4 1/2 துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி மீண்டும் சளி தொந்தரவு இருந்ததாக […]

Continue Reading

அரியலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகே ,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட அதிமுக அவை தலைவர் ஜெ.கே.என் இராமஜெயலிங்கம் வரவேற் றார்.தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கள் குறித்தும்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் […]

Continue Reading

திருச்சி: திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு எதிராக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் ஏற்பாட்டில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக […]

Continue Reading