
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் வயது 34 இவரது மனைவி திவ்யா இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள் இவருடைய மகன் பிரஜன் வயது 4 1/2 துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி மீண்டும் சளி தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது.
பிரஜனுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனால் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெறுவதற்காக காலை 11. 30மணி அளவில் சென்றுள்ளார்கள் ஆனால் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் பணியில் இருந்து உள்ளார்.
அவர் நடுநிலை மருத்துவ உதவியாளர் என்று தெரிய வருகிறது.
அங்கே சென்றபோது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்துள்ளது உடனடியாக அங்கிருந்த நடுநிலை உதவியாளர் உடனடியாக 108 அவசர உறுதிக்கு தொலைபேசி மூலம் அழைத்துள்ளார் அங்கு அவசர உறுதியில் செவிலியர் யாரும் இல்லாமல் ஓட்டுனர் மட்டுமே வந்ததாக தெரிய வருகிறது.
உடனடியாக தாமதிக்காமல் பெற்றோர்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தின் மூலமாக துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து காண்பித்த போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தாக கூறினார்கள். இது பற்றி பெற்றோர்கள் கூறுகையில் கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சேர்த்து உள்ளது இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே என் குழந்தை போல இந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது அவசர உதவிக்கு சென்றால் கூட மருத்துவ செவிலியர் யாரும் பணியில் இருப்பதில்லை இங்கு இருக்கக்கூடிய செவிலியர் குடியிருப்பில் செவிலியர்கள் தங்குவதில்லை முதல் உதவிக்கு சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முழு நேரமாக செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

