துறையூர் பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு – பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டுகோள்

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கொடி அணிவகுப்பை (Flag March) நடத்தினர். இந்த அணிவகுப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பின்னணியில் எந்தவித பதற்றமும் உருவாகாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அணிவகுப்பை முசிறி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய […]

Continue Reading

திருச்சி அருகே லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் தாலுகா, வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 49) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 35 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ. 2,250 ரொக்கப் பணத்தை […]

Continue Reading

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 60) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், திருச்சி நவல்ப்பட்டு மற்றும் மணிகண்டம் பகுதிகளில் போலீசார் நடத்திய […]

Continue Reading

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட ஜோதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மணி தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து […]

Continue Reading

திருச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

திருச்சி, மே. 2- நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பழனியப்பன், ரத்த வெள்ளத்தில் […]

Continue Reading

விஜய்யின் விஸ்வரூபத்தால் நிலைகுலைந்த திராவிட கோட்டைகள்?

  2021-ல் தப்பிய வரலாறு! இம்முறை கைகொடுக்குமா? விஜய்யின் விஸ்வரூபத்தால் நிலைகுலைந்த திராவிட கோட்டைகள்? எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்பொழுது பெரும் குழப்பத்திலும் விவாதத்திலும் ஆழ்ந்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் கள நிலவரத்தை இன்னும் சூடாக்கியுள்ளன. நேற்று முன்தினம் எக்ஸில் போல்கள் வெளியாகின.. இதனால் ஒருபுறம் […]

Continue Reading

திருச்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

  வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி ! திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் (04/05/26 )அன்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள்: இக்கூட்டத்தில் […]

Continue Reading

தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு

  தொட்டியம், ஏப். 30: திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2026–2027ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகளின்படி, சங்கத்தின் தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பெரிய. பார்த்திபன், மகளிருக்கான துணைத் தலைவராக ஜி. துர்காதேவி ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும், செயலாளராக ஏ. அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்ட நிலையில், இணைச் செயலாளராக ஜி. பிரசாந்த் மற்றும் மகளிருக்கான இணைச் செயலாளராக […]

Continue Reading

பெரம்பலூரில் அகழ் அரங்கம் துவக்க விழா

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்…    பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் அகழ் குழுமத்திற்கு சொந்தமான அகழ் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூரின் வரலாற்று ஆசிரியர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் சாரங்கபாணி, கவிஞர் ராமர், மொழிபெயர்ப்பாளர் மூர்த்தி, எழுத்தாளர் மோகன். இ. தாகிர் பாட்ஷா, பேச்சாளர் காருண்யா, தலைமை ஆசிரியர் மலர்கொடி, இலக்கிய ஆர்வலர் சுரேஷ்குமார், அகழ் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த், திவ்யா மற்றும் தலைமை ஆலோசகர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து […]

Continue Reading

அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கிவைத்தார்

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்   அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கி வைக்க பொதுமக்கள் வடம் பிடிக்க வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் கோவில் ஜமீன்தார்களின் வம்சாவழி கோவிலாகவும், பல […]

Continue Reading