பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூர்

பெரம்பலூர், செப்.28-

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் நர்சிங், மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் துணை மருத்துவ அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழா தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கி 598 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் விழாவை தொடங்கி வைத்தார். அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வி.ராஜசெல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

 

பெரம்பலூரின் மாபெரும் வளர்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்களின் பங்கு மகத்தானது. மாணவர்கள் தங்களை உயர்த்திய பெற்றோர், ஆசிரியர்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்.

மருத்துவத் துறைக்கு ‘எக்ஸ்பைரி’ கிடையாது. புத்தக அறிவை விட கூர்ந்து கவனிக்கும் திறன், சரியான புரிதல் மற்றும் மென்திறன்களே சிறந்த மருத்துவரை உருவாக்கும். நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு செயலையும் முதல் முறையிலேயே சரியாக செய்ய வேண்டும். கனிவான தகவல் தொடர்பே நோயாளிகளின் முழு திருப்தியை தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் முகமது ஹாலித் வரவேற்றார். நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் இளங்கோவன், பல்வேறு கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *