கோவையில் வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்ட இசை இரவு 5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்பு – தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கல்

கோவை

கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்க நகைகளை வாங்கும் வகையில் 9, 14 மற்றும் 18 காரட் தரங்களில் நகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருவதாக ஜூவல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜூவல் ஒன் ஜூவல்லரி நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் அரங்கில் பிரமாண்டமான “இசை இரவு” நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஸ்ரீதர்ஷனா, ஸ்ரீநிஷா, பிரியங்கா, பரத், லைனெட் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்று பாடல்கள் பாடியும், நடன நிகழ்ச்சிகளை நடத்தியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியின் இடையே வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளாக தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்திலும், அவர்களுடன் நேரடியாக கொண்டாடும் வகையிலும் “இசை இரவு” நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கோவை கிராஸ்கட் சாலையில் சமீபத்தில் பிளாக்ஷிப் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட நகைக்கடையில் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வகையான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுவாக வாடிக்கையாளர்கள் 22 காரட் தங்க நகைகளை அதிகம் விரும்பி வாங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது 18 காரட் தங்க நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சீனிவாசன் தெரிவித்தார்.

22 காரட் தங்க நகைகளுடன் ஒப்பிடும்போது 18 காரட் நகைகளின் விலை குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப அவற்றை வாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தங்கத்தின் மீதான ஆர்வம் கொண்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவில் தங்க நகைகளை வாங்கும் வகையில் 9 காரட் மற்றும் 14 காரட் தரங்களிலும் நகைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஜூவல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *