துறையூரில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

துறையூர்

 

இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்!

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மதுராந்தகத்தில் மறாறுமா மரகத குமரவேல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருமான மு. ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, வாக்காளர்களுக்குப் பணம் வழங்காமல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாகவும், திருமங்கலம் ஃபார்முலாவை முறியடித்துள்ளதாகவும் துணை சபாநாயகர் ரவிசங்கர் பொதுமக்களியை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் மதன், துறையூர் தெற்கு நகரச் செயலாளர் வினோத்குமார், வடக்கு நகரச் செயலாளர் சூர்யா, துறையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தர்மா, வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர், மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாசம், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த், வடக்கு ஒன்றியச் செயலாளர் குணசேகரன், மத்திய ஒன்றியச் செயலாளர் சண்முகம், உப்பிலியபுரம் பேரூர்க் கழகச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர்க் கழகச் செயலாளர் கண்ணன் என்ற கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அரசு வழக்கறிஞர் விவேக் ராஜா, அரசு குற்றவியல் வழக்கறிஞர் செல்லதுரை, கூடுதல் வழக்கறிஞர் தனசேகரன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வெற்றிப் பேரவை தொழிற்சங்க நிர்வாகிகளான தேனூர் மணிகண்டன், அன்பழகன், மகேந்திரன், கார்த்திகேயன், விஜயகுமார், மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *