மாணவர், மாணவியர் பிரிவில் வெற்றி; 23 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் செப்டம்பர் 9 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 11ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இதில் நாகை தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பிரிவிலும், மாணவியர் பிரிவிலும் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தனர்.
மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.54,000 ரொக்கப் பரிசும், மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.54,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மேலும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.18,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்கள் பிரிவில் 12 பேரும், மாணவியர் பிரிவில் 11 பேரும் என மொத்தம் 23 பேர் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களைப் பள்ளித் தாளாளர் ஜான் பிரிட்டோ பாராட்டி வாழ்த்துத் தெரிவித்ததுடன், பரிசுகளையும் வழங்கினார்
