தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ் .இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர்

அரியலூர்,ஏப்.13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் மேற்கு ஒன்றியத்துக்கு ட்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.இராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்

காங்கேயன்பேட்டை,காந்திநகர்,அம்பலவர்கட்டளை,உடையவர் தீயனூர்,பெருமாள் தீயனூர், செங்குழி, மலைமேடு,அரசநிலை யிட்டபுரம், விக்கிரமங்கலம், அம்பாபூர், சாலை, ஆலவாய்,கீழநத்தம், மழவராயநல்லூர், கோவில்சீமை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் பிரசாரம்மேற்கொண்ட அவர், கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங் கள் குறித்தும்,கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் குடிநீர் வரி, சொத்த வரி என உள்ளிட்ட வரிகளை திமுக அரசு குறித்தும் விளக்கி, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும் வாக்கு சேகரித்தார்.பிரசாரத்தில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் இராமஜெ யலிங்கம்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்சிவசுப்பிரம ணியம்,மாவட்ட அதிமுக துணை செயலாளர் தங்க.பிச்சமுத்து,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன், ஒன்றிய அதிமுக செயலாளர் விக்கிரம பாண்டியன், மாவட்ட பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *