பெரம்பலூர் | ஏப்ரல் 15: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நான்கு முக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (ஏப்ரல் 16) மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கழகத் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி. அவர்களின் வழிகாட்டுதல்படியும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் இந்தச் சிறப்புப் பரப்புரைக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை மாலை 6.00 மணியளவில், பெரம்பலூர் – அரியலூர் சாலையில் உள்ள ஒதியம் பிரிவு சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் பின்வரும் நான்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்:
-
பெரம்பலூர் தொகுதி: டாக்டர் S.T.ஜெயலெட்சுமி
-
குன்னம் தொகுதி: சா.சி.சிவசங்கர் (அமைச்சர்)
-
அரியலூர் தொகுதி: லதாபாலு
-
ஜெயங்கொண்டம் தொகுதி: கா.சொ.க.கண்ணன்
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு வீ.ஜெகதீசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரப்புரைக்கான விரிவான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கழகத்தினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் கேப்டன்


