அரியலூரில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

அரியலூர் ஸ்ரீ ராமஜெயம் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொடர் ந்து அவர் பேசுகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் , இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தன்னை 25000/- வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், பொது […]

Continue Reading

பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 16: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, திமுக ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன், நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் ம. […]

Continue Reading

துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்… திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு துறையூரில் உற்சாக வரவேற்பு அளித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் மாலை அணிவித்தார், […]

Continue Reading

பெரம்பலூரில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

  செய்தியாளர் :வசந்த் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய இணைப்பு சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடக்கு மாதவி சாலை, எம்.ஆர்.நகர், எதிரி ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் கட்டுமான பொருட்கள், கடை விரிவாக்கங்கள் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக […]

Continue Reading

புகையிலை பொருட்கள் பறிமுதல் : பெட்டிக்கடை உரிமையாளர் கைது

செய்தியாளர்  : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே. 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணவாளர் தலைமையில் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய வணிக நிலையங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது முத்துவாஞ்சேரி கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த புகழ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த […]

Continue Reading

பனை மரத்தில் மொபட் மோதி இளைஞர் உயிரிழப்பு

செய்தியாளர் : ஜேசுராஜ்   விக்கிரமங்கலம், மே 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சந்திரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ராமன் (19) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ராமன், தனது நண்பருக்கு சொந்தமான மொபட்டில் சந்திரபாளையம் கிராமத்திலிருந்து வி.கைகாட்டி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விழுந்தார். […]

Continue Reading

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை !

  திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யோகநாதன் உப்பிலியாபுரம் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அண்ணா பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை […]

Continue Reading

புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் உற்சாக குளியல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைசுற்றுலாத் தலம், தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருவதால், இப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான […]

Continue Reading

துறையூரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு போதிய அறிவிப்பின்றி பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையொட்டி, பேருந்துகளின் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்காததால் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு […]

Continue Reading