தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார் செய்தியாளர்:சுபாஷ் செல்வம் பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் […]

Continue Reading

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் உலக ரெட் கிராஸ் தினம்

செய்தியாளர்:பாலசுப்பிரமனியன்   அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப் பட்டது.மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் பிறந்த ரெட் கிராஸ் நிறுவனரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக உலக நாடுகளால் அனுசரிக்க ப்பட்டுகிறது.ஜீன் ஹென்றி டுனாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கிளையின் […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல்: வாலிபர் கைது

செய்தியாளர் : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே 12 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீபுரந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். அப்போது, கூத்தாடி ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் […]

Continue Reading

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு? விவசாயிகள் குற்றச்சாட்டு

    செய்தியாளர்  : சுபாஷ் செல்வம்   அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மஞ்சமேடு, திருமழப்பாடி, இளந்தங்கூடம், கண்டிராதீர்த்தம், மேலவரப்பான்குறிச்சி, ஏலாக்குறிச்சி மற்றும் கரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகாரப்பூர்வமற்ற கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நிலையத்தில் ஒரு சீசனுக்கு சுமார் 600 முதல் 700 […]

Continue Reading

துறையூர் பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு – பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டுகோள்

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கொடி அணிவகுப்பை (Flag March) நடத்தினர். இந்த அணிவகுப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பின்னணியில் எந்தவித பதற்றமும் உருவாகாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அணிவகுப்பை முசிறி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய […]

Continue Reading

திருச்சி அருகே லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் தாலுகா, வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 49) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 35 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ. 2,250 ரொக்கப் பணத்தை […]

Continue Reading

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 60) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், திருச்சி நவல்ப்பட்டு மற்றும் மணிகண்டம் பகுதிகளில் போலீசார் நடத்திய […]

Continue Reading

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட ஜோதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மணி தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து […]

Continue Reading

திருச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

திருச்சி, மே. 2- நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பழனியப்பன், ரத்த வெள்ளத்தில் […]

Continue Reading

விஜய்யின் விஸ்வரூபத்தால் நிலைகுலைந்த திராவிட கோட்டைகள்?

  2021-ல் தப்பிய வரலாறு! இம்முறை கைகொடுக்குமா? விஜய்யின் விஸ்வரூபத்தால் நிலைகுலைந்த திராவிட கோட்டைகள்? எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்பொழுது பெரும் குழப்பத்திலும் விவாதத்திலும் ஆழ்ந்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் கள நிலவரத்தை இன்னும் சூடாக்கியுள்ளன. நேற்று முன்தினம் எக்ஸில் போல்கள் வெளியாகின.. இதனால் ஒருபுறம் […]

Continue Reading