கலைஞர் 103-வது பிறந்தநாள்: அரியலூரில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள்

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம் அரியலூர், ஜூன் 3: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் திமுக சார்பில் இரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழைவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தா (42). இவரது கணவர் சக்திவேல் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாய நிலத்தில் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிமருந்தை சாந்தா குடித்துள்ளார். பின்னர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Continue Reading

வாகன சோதனையில் 2 பேர் கைது: புகையிலை பொருட்கள், மொபட் பறிமுதல்!

  செய்தியாளர்: ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே 28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மொபட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் இன்று விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ‘வி. கைகாட்டி’ பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வந்த […]

Continue Reading

கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம்

கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் சட்டசபையை கூட்டி சிறப்புத் தீர்மானம் கொண்டு வாருங்கள் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வேண்டுகோள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டல் படி 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் தள்ளுபடி செய்த தொகையை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும் என கறுகிறது என தமிழக அரசு செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் […]

Continue Reading

டாஸ்மாக் கடை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்   செந்துறை அருகே படைவெட்டி குடிக்காட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 6483-ஐ உடனடியாக மூடக்கோரி மக்கள் காவலர் கு.முடி மன்னன் தலைமையில் பெண்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், படைவெட்டி குடிக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையால் சுற்றுவட்டார கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தத்தனூர், வங்காரம், மனப்பத்தூர், நந்தியன் […]

Continue Reading

அரியலூரில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் கோரிக்கை

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு பொறுப்பு வழங்கியுள்ளது. அதேபோல் […]

Continue Reading

மாவட்ட தலைமை அலுவலகங்கள் பல அரியலூருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் கோரிக்கை

    அரியலூர் கோட்டாட்சியர் பிரேமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்துகொண்டு, பேசுகையில்   பொதுப்பணித்துறை வசமுள்ள கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரி 1580 ஏக்கரில் 416 ஏக்கரே உள்ளது 1200 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளதனை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேல வண்ணம் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற […]

Continue Reading

அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தினம் அனுசரிப்பு.

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்   அரியலூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தின, நினைவேந்தல் நிகழ்ச்சி ,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.செட்டியே ஏரி கரை பூங்காவிலுள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ் எம் எஸ் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.அரியலூர் […]

Continue Reading

கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை: ஒருவர் கைது

விக்கிரமங்கலம், மே 20:   அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலையனூர் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொலையனூர் தெற்கு தெருவில் வசித்து வரும் செந்தில்குமார் (45) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Continue Reading

கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

  செய்தியாளர்: ஜேசுராஜ்  விக்கிரமங்கலம், மே 19 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி நோக்கி வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனை கண்ட மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர், வண்டியை சாலையோரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை […]

Continue Reading