துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

விழாவையொட்டி சார் பதிவாளர் மகாராஜன், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து, சார் பதிவாளர் மகாராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள் பிரேமலதா, சுகந்தி, தீபிகா, பாலாஜி, சக்தி, முருகன், வேல்முருகன் மற்றும் பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மணி, சுதாகர், சுரேஷ், சின்னராசு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   <b> […]

Continue Reading

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

வட்டாட்சியர் சித்ரா தேசியக் கொடியேற்றி மரியாதை துறையூர்: நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் துறையூர் வட்டாட்சியர் சித்ரா கலந்து கொண்டு, அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக […]

Continue Reading

துறையூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து […]

Continue Reading

துறையூரில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

துறையூர் : திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. துறையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல் மற்றும் […]

Continue Reading

அமைச்சர் நிகழ்ச்சியில் துறையூர் எம்.எல்.ஏ. ‘ஆப்சென்ட்’… பதாகையிலும் இடமில்லை!

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு, கிடங்கு தொடர்பான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், துறையூர் தொகுதியின் சட்டமன்ற […]

Continue Reading

துறையூரில் தானிய சேமிப்புக்கு புதிய வசதி – 7,500 மெட்ரிக் டன் வாடகை கிடங்கு திறப்பு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார் துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக்கிடங்கை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள இந்த தானியக்கிடங்கில் நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக […]

Continue Reading

போதையில்லா தமிழகம்: திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம், செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்ச்சுடர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன், புல முதல்வர் முனைவர் […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி பொறியியல் கல்லூரியில் தூய்மைப் பணி… 60 மாணவர்கள் பங்கேற்பு

  திருச்சி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சமூகப் பணிகளில் ஒன்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மத்தியில் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மேலும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் கைது: துறையூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 

  செய்தியாளர் : அருண் 90959 25936 துறையூர், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக […]

Continue Reading

துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

  துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கிய பேரவை ஒருங்கிணைக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நேற்று (02.08.2026) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் க. நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் செல்வரத்தினம் வரவேற்புரையாற்றினார். துறையூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் […]

Continue Reading