ஸ்டாலின் தான் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார் – திருச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

  செய்தியாளர்  : அருண் – 90959 25936 மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் […]

Continue Reading

துறையூரில் மாநில கராத்தே போட்டி கோலாகலம்; 200 மாணவர்கள் அசத்தல்!

செய்தியாளர்:அருண் – 90959 25936   திருச்சி மாவட்டம் துறையூரில்  சர்வதேச ஷிடோரியோ கராத்தே மற்றும் கோபுடோ மையத்தின் சார்பில் 6-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் கோபுடோ போட்டி, துறையூர் சி.எம்.எஸ். கூட்டுறவு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே மற்றும் கோபுடோ பிரிவுகளில் தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் […]

Continue Reading

ஆடி 18 விழாவை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் – நீராட 40 தண்ணீர் குழாய்கள் அமைப்பு

  செய்தியாளர் : அருண் 90959 25936 ஆடி மாதத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் புதுமணத் தம்பதிகள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது தாலியை மாற்றிக்கொள்வது வழக்கமாகும். மேலும், குடும்ப நலன், வளம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள். திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு […]

Continue Reading

திருச்சியில் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி முன்னாள் எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா பிரதர்ஸ் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துறையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இப்போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் […]

Continue Reading

22 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கடன் சுமையில் தவிப்பு; தேர்தல் வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்” – ஈசன் முருகசாமி திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் நிலம் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கல்லக்குடியில் மாபெரும் பேரணி மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். லால்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் இந்த போராட்டத்தில் ஆயிரணகணக்கான […]

Continue Reading

காவிரியில் தண்ணீர் இன்றி வறண்ட நிலை: திருவானைக்காவல் தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பு

திருச்சி, ஆக. 1: கர்நாடகா அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு நீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பல இடங்களில் ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், ஆடி மாதத்தில் காவிரி ஆறு முழுவதும் நீர் […]

Continue Reading

துறையூர் நகர்மன்றத்தில் பரபரப்பு… குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து திமுக வாக்அவுட்!

  செய்தியாளர்: அருண் 9095925936 திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்  நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சியின் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் போது, துறையூர் நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம்  உயர்த்தப்பட்டிருப்பது குறித்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும், எந்தவித முன்னறிவிப்பும் […]

Continue Reading

32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் -அருண்: 9095925936 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகம், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக […]

Continue Reading

திருச்சியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி தீக்கிரை – தீவைப்பா? விபத்தா? போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாநகரம் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரி, சஞ்சீவி நகர் அருகே வாடாமல்லி தெருவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லாரி அருகே இருந்த கருவேலச் செடிகளில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த தீ வேகமாக பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் சூழ்ந்ததால், லாரி முழுவதுமாக தீக்கிரையாகி சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், லாரி […]

Continue Reading

முசிறி அருகே கொடூர வறட்சி: குடங்களில் தண்ணீர் சுமந்து மரவள்ளியை காப்பாற்றும் விவசாயிகள் – கருகும் கரும்புத் தோட்டங்கள்!

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திற்குட்பட்ட மங்களம் அருகே அண்ணா நகர் பகுதியில் கடுமையான வறட்சி விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ (El Niño) தாக்கத்தால் பருவமழை பொய்த்துப் போன நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சாகுபடி செய்யப்பட்ட வருடப் பயிர்கள் கண்முன்னே காய்ந்து வருவதால், அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். […]

Continue Reading