
துறையூர், ஜூன் 3:
தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கான தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதன்படி, வருகின்ற ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை “வாருங்கள் கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தீ விபத்துகள், சாலை விபத்துகள் உள்ளிட்ட அவசர காலங்களில் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது குறித்து வகுப்புகள் நடத்தப்படுவதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் செயல்முறை விளக்கங்களும் நேரடியாக அளிக்கப்பட உள்ளன.

மேலும், முதலுதவி முறைகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
<b> Total Views: 49 </b>

