திருச்சியில் சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். காவல்துறை, […]

Continue Reading

நாகப்பட்டினத்தில் மகளிர் தொழில் முனைவோர் தேர்வு நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் பங்கேற்பு

செய்தியாளர்: விஜய் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கும் நிறுவனம் (TN-RISE) சார்பில் மகளிர் தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் முகாம் இன்று (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊரகப் பகுதியைச் சேர்ந்த திறன்மிகு மகளிர் தொழில்முனைவோரைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம், நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை […]

Continue Reading

தலைப்பு: பெரம்பலூர் அருகே 175.527 கிலோ குட்கா பறிமுதல்: பெண் கைது – கார் பறிமுதல்

செய்தியாளர் வசந்த் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) சிறப்பு போலீசார் கைது செய்து, 175.527 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். போலீசார் தெரிவித்ததாவது, சிறுவாச்சூர் அருகே சரவணன் வயல், பெரியசாமி கோவில் பகுதியில் நேற்று (ஜூலை 25) மதியம் சுமார் 1.30 மணியளவில் ANTF சிறப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதடி பகுதியைச் சேர்ந்த […]

Continue Reading

நாகையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம், ஜூலை 26: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகம்மது குத்புதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகுருதீன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அபுகாசிம், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ரபீக் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முகம்மது யாமீன், மாவட்ட […]

Continue Reading

துறையூர் அருகே இமயம் கல்லூரியில் தடகளப் போட்டி; 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான இடையேயான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. போட்டிகளுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முசிறி டிஎஸ்பி முத்துக்குமார், கல்லூரி தாளாளர் ஆண்டி மற்றும் இயக்குநர் ஜனார்த்தனன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி […]

Continue Reading

துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்ட என்.தன்ராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக, கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ள என்.தன்ராஜ் தலைமையில், சிங்களாந்தபுரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், துறையூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் […]

Continue Reading

துறையூரில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள ஆவணங்கள் வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. மேலும், பழங்குடியின மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்து, அவற்றை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே தகராறில் இருவரை தாக்கிய 4 பேர் கைது

அரியலூர், ஜூலை 26: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழ கோவிந்தபுத்தூரில் ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ கோவிந்தபுத்தூரைச் சேர்ந்த மதியழகனின் மகன் சுரேஷ்குமார் (26), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, அவரது கடைக்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருடன் அறிவொளி (21) வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சுரேஷ்குமாரின் தம்பி தினேஷ்குமார், “ஏன் […]

Continue Reading

5 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் – மாவட்ட ஆட்சியரிடம் வாட்ஸ்அப் மூலம் புகார்

செய்தியாளர்:வசந்த் பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் துறைமங்கலம் திட்டப் பகுதிக்குட்பட்ட கவுல் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் […]

Continue Reading

துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மைத் துறையின் சார்பில் இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading