துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்ட என்.தன்ராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

துறையூர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக, கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ள என்.தன்ராஜ் தலைமையில், சிங்களாந்தபுரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், துறையூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவருமான என்.யோகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திராகாந்தி, மாவட்ட கழக பொருளாளர் குட்டி (டி.ஜெயசீலன்), ஒன்றிய கழக செயலாளர்கள் பொன்.காமராஜ், அழகாபுரி எம்.செல்வராஜ், நகராட்சி கழக செயலாளரும் கவுன்சிலருமான அ.அமைதிபாலு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பூக்கடை குரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.சத்தியவாணி, பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முன்னாள் அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் வி.நாகராஜன், வழக்கறிஞர்கள் டி.கார்த்திகேயன், எஸ்.ஆர்.செந்தில்குமார், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், நகராட்சி மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *