Sample Page

கோவையில் தனிஷ்க் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி

கோவை கோவை தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தொடங்கியது. அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண்களுக்கான பிரத்யேக நகை வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், பாரம்பரிய தங்க நகைகள், குந்தன், போல்கி, நவரத்தினம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் வடிவமைப்புகள், மலர் மற்றும் மயில் உருவங்கள் […]

Continue Reading

கோவையில் சுகுணா பிப் பள்ளியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி: 5,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றன

கோவை, அக்.11 மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களை வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கவும் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் ‘தி பிக் புக் ஃபேர்’ என்ற தலைப்பில் 3 நாள் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. அக்.8 முதல் 10-ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், ‘சப்னா புக் ஹவுஸ்’ நிறுவனத்தின் பங்களிப்புடன் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியின் நிறைவு […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் 58வது பிறந்தநாள் விழா:அரியலூரில் பாமகவினர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிருபர் : சுபாஷ் செல்வம்  அரியலூர்: பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் கிழக்கு ஒன்றிய பாமக சார்பி ல் பல்வேறு கிராமங்களில் கட்சிக்கொடியேற்றி,மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதலாவதாக, கோப்பிலியன் குடிக்காடு கிராம பேருந்து நிறுத்தம் அருகே பாமக கட்சிக் கொடியேற்றி பொது மக்களு க்கு இனிப்புகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, கோப்பிலி யன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ-மாணவி களுக்கு நோட்டு, பேனா, […]

Continue Reading

அரசு அலுவலகங்கள், கல்லூரி களில் தொடர்ந்து தூய்மைப் பணி அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்

நிருபர் : சுபாஷ் செல்வம் அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ந.மிருணா ளினி தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் இணைந்து குப்பைகள், முட்செடிகள், நெகிழிக் கழிவுகளை அகற்றினார். அப்போது, அரசு அலுவலக ங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்படும். தூய்மையை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் […]

Continue Reading

வி.கைகாட்டியில்மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: பாமகவினர் மரக்கன்றுகள் வழங்கல்

நிருபர் : சுபாஷ் செல்வம் அரியலூர்: பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,யின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் தெற்கு ஒன்றிய பாமக சார்பில் வி.கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் 300 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு அரியலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி தங்க செம்மலை தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தன், வேல்முருகன், தொழிற்சங்கத் தலைவர் தங்க கரிகாலன், நகரச் செயலாளர் விஜி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ., சாமிதுரை, மாவட்ட […]

Continue Reading

நாகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி முக்குலத்துப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம், அக். 10: நாகப்பட்டினம் அவுரித்திடலில், ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி முக்குலத்துப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் தலைமை வகித்தார். தஞ்சை மண்டல செயலாளர் தேவர் முன்னிலை வகித்தார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் […]

Continue Reading

கீழ்வேளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்ணுரிமை நாள் அனுசரிப்பு!

பஞ்சமி நில மீட்பு போராளிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம்! நாகப்பட்டினம், அக். 10: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்ணுரிமை நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் சான் தாமசு, ஏழுமலை ஆகியோருக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த சான் தாமசு, ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான அக்டோபர் 10-ஆம் […]

Continue Reading

கோவையில் கிரிஸ்பி க்ரீம் டோனட் விற்பனை நிலையங்கள் தொடக்கம்

அமெரிக்காவின் பிரபல டோனட் நிறுவனமான கிரிஸ்பி க்ரீம், கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மால், ப்ரோசோன் மால் மற்றும் கோவை விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தனது விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையங்கள் மூலம், ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோ வழியாகவும் கோவை முழுவதும் டோனட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கிரிஸ்பி க்ரீம் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் இந்த விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் புதிய உணவு அனுபவங்களுக்கான […]

Continue Reading

கோவை தனியார் அறிவியல் கல்லூரியியில் ‘சிறகுகள் 2026’ நிகழ்ச்சி

இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார் கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில், முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ‘சிறகுகள் 2026 , முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் படைப்பாற்றல் அங்கீகாரம்’ நிகழ்ச்சி,கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் பயின்று தமிழ் திரையுலகில் சாதனை படைத்து வரும் முன்னாள் மாணவர்களான […]

Continue Reading

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு!

‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, இன்று (அக். 10) நிறைவடைகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னிறுத்தி, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ […]

Continue Reading