Sample Page

2050-ல் காந்தியச் சிந்தனையை மறுவடிவமைத்தல்! குமரகுரு கல்லூரியில் கருத்தரங்கம்

சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றைப் பாதுகாப்பதே இந்தியாவின் எதிர்கால முன்னுரிமைகள் – கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு! குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், “2050-ஆம் ஆண்டில் காந்தியச் சிந்தனையை மறுவடிவமைத்தல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கல்லூரியின் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான ஐந்து முக்கிய முன்னுரிமைகளை எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், அரசியலமைப்பைப் போற்றுதல், நாட்டின் பன்முகத்தன்மையைப் பேணுதல், […]

Continue Reading

நாகை தாமரைக் குளத்தைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தத் திட்டம்! நகர்மன்றத் தலைவர் ஆய்வு

இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் பராமரிப்புப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பழமைவாய்ந்த தாமரைக் குளத்தைத் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்திப் பராமரிக்கும் பணிகளைத் தொடங்குவது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தாமரைக் குளம், மழைக்காலங்களில் முக்கிய வடிகால் பகுதியாகவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி இடமாகவும் விளங்கி வருகிறது. கடந்த […]

Continue Reading

கோவையில் நூதனத் திருட்டு: டைட்டல் பார்க்கில் பைக் திருட்டு; நீலாம்பூரில் ஹெல்மெட்டும் அபேஸ்!

  போலீஸார் போன் செய்த பிறகே பைக் திருடுபோனது உரிமையாளருக்குத் தெரிந்தது – பீளமேடு, நீலாம்பூர் காவல் நிலையங்களில் புகார்! கோவையில் டைட்டல் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர், நீலாம்பூரில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா அருகே உள்ள டைட்டல் பார்க்கில் செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது இருசக்கர […]

Continue Reading

துறையூரில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

  இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்! திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மதுராந்தகத்தில் மறாறுமா மரகத குமரவேல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருமான மு. ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், […]

Continue Reading

மனைவியைக் கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை!

ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடிப்பதற்குப் பணம் தராததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த ராஜின் மகன் தங்கவேலு (50). கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2025-ஆம் […]

Continue Reading

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

  வேதாரண்யம் காவல் நிலைய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு நாகப்பட்டினம், 08.10.2026: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேதாரண்யம் காவல் நிலையத்தில் Cr.No.285/2013, U/s 302 IPC r/w 34 IPC என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் புஷ்பவனம், பூவாலி தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமியின் […]

Continue Reading

வேளாங்கண்ணியில் வெளியூர் ஓட்டுநர் மீது தாக்குதல் – நாகையில் குவிந்த ஓட்டுநர்கள்!

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் சவாரிக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் நவீன் மீது உள்ளூர் ஓட்டுநர்கள் 5 பேர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு சவாரி ஏற்றிச் சென்றபோது நவீனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஓட்டுநர்கள் கார்களுடன் நாகைக்கு திரண்டனர். […]

Continue Reading

பெங்களூர் IT வேலையை விட்டு கஞ்சா வியாபாரம்” – கோவையில் 148 கஞ்சா சாக்லேட்டுகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!

    சாஸ்திரி நகர் சுடுகாடு அருகே மடக்கிய போலீஸ் : ஆந்திர எல்லையில் இருந்து கடத்தி வந்த அதிர்ச்சி பின்னணி! ​ கோவை, ரத்தினபுரி அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பெங்களூர் முன்னாள் ஐடி (IT) ஊழியர் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகரம், […]

Continue Reading

ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ்’ சார்பில் பிரம்மாண்ட துணை விற்பனையாளர்கள் மாநாடு மற்றும் வணிகச் சங்கமம் கோலாகலம்!

  ​கோவை மேட்டுப்பாளையம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள எம் இன் விடுதியில், டி.ஐ. சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் (ஈரோடு மற்றும் கோவை) சார்பில் “எல்லைகளைத் தாண்டிப் பயணிப்போம்” என்ற நோக்கில் சிறப்புத் துணை விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் உரிமையாளர் துளசிமணி, நிர்வாகப் பொறுப்பாளர் அர்ஜுனன் மற்றும் கோவை கிளை மேலாளர் சண்முகம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டி.ஐ. சைக்கிள்ஸ் […]

Continue Reading

ரூ.7.67 லட்சம் செலவில் கட்டிய கட்டிடம்… 6 ஆண்டுகளாக திறக்கப்படாத அவலம்! புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு!

புளியஞ்சோலையில் பெண்கள், குழந்தைகள் படும் அவதி – அதிகாரிகள் கவனிப்பார்களா? திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இயற்கை எழில் கொஞ்சும் முக்கிய சுற்றுலா தளமான புளியஞ்சோலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புளியஞ்சோலை, திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு […]

Continue Reading