
அரியலூர், செப்.29 அரியலூர் ஜி ஆர் திருமண மஹாலில் என் பாலகிருஷ்ணன் நினை வரங்கில் ஏஐடியூசி தொழி லாளர்களின் 9-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் டி.தண்டபாணி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர் தன்சிங் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். முதல் நிகழ்வாக சங்கத்தின் தேசிய நிர்வாக க்குழு உறுப்பினர் சி.சந்திர குமார் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சங்க த்தின் மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் உள்ளிட் டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .தொடர்ந்து சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் இரா உலகநாதன்,அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி ஆறுமுகம், அரியலூர் ஒன்றிய சிபிஐ செயலாளர் து. பாண்டியன்,மாதர் சங்க நிர்வாகி இ முருகேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து
மாநாட்டில், அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் குறைந்து வரும் சிமெண்டு விற்பனையை அதிகரித்து, ஆலையை தனியார் மயமாக்காமல் பொதுத்து றையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் போதிய தூய்மைப் பணியாளர்களை நியமித்து, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு நிரந்தரப் பணி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். கட்டுமானம்
மற்றும் உடலுழைப்பு தொழி லாளர்களின் ஓய்வூதிய த்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் புதிய தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலான ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரியலூர் நகரில் சாலையோர வியாபாரி களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க அவர்களு க்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய ஏஐடியூசி நிர்வாகி களாக மாவட்ட தலைவராக ஆர்.தனசிங்,பொதுச்செயலாளராக டி.தண்டபாணி, செயலா ளர்களாக மா.தம்பிசிவம், ரெ.நல்லுசாமி, துணைத்தலை வர்களாக டி.ஜீவா, டி.காத்தவ ராயன், பொருளாளராக து.பாண்டியன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
