வறண்ட வாய்க்காலில் ஆடிப்பெருக்கு… நீச்சலடித்து விவசாயிகள் போராட்டம்!

செய்தியாளர் : விஜய் நாகை, ஆக. 3: நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில், காவிரி நீர் வராததால் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகள் மற்றும் பெண்கள் நூதன முறையில் கடைப்பிடித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தனர். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், பூ, பழம் வைத்து படையலிட்டு, விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டி பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டனர். கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் […]

Continue Reading

துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

  துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கிய பேரவை ஒருங்கிணைக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நேற்று (02.08.2026) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் க. நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் செல்வரத்தினம் வரவேற்புரையாற்றினார். துறையூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் […]

Continue Reading

ஸ்டாலின் தான் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார் – திருச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

  செய்தியாளர்  : அருண் – 90959 25936 மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் […]

Continue Reading

துறையூரில் மாநில கராத்தே போட்டி கோலாகலம்; 200 மாணவர்கள் அசத்தல்!

செய்தியாளர்:அருண் – 90959 25936   திருச்சி மாவட்டம் துறையூரில்  சர்வதேச ஷிடோரியோ கராத்தே மற்றும் கோபுடோ மையத்தின் சார்பில் 6-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் கோபுடோ போட்டி, துறையூர் சி.எம்.எஸ். கூட்டுறவு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே மற்றும் கோபுடோ பிரிவுகளில் தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் […]

Continue Reading

போலி தொழிலாளர்களை நீக்கி உண்மையான கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை

செய்தியாளர் : விஜய் தமிழக கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ். துரையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்று, தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதுடன் சங்க வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட உறுதியேற்றனர். மேலும், கல்வி உதவி, […]

Continue Reading

செம்போடை வெளி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வெளி மாரியம்மன் ஆலய ஆடி உற்சவ திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர். திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து தினமும் காத்தவராயன் கதை நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை […]

Continue Reading

ஆடி 18 விழாவை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் – நீராட 40 தண்ணீர் குழாய்கள் அமைப்பு

  செய்தியாளர் : அருண் 90959 25936 ஆடி மாதத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் புதுமணத் தம்பதிகள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது தாலியை மாற்றிக்கொள்வது வழக்கமாகும். மேலும், குடும்ப நலன், வளம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள். திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு […]

Continue Reading

திருச்சியில் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி முன்னாள் எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா பிரதர்ஸ் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துறையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இப்போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் […]

Continue Reading

கொடைக்கானல் பூம்பாறையில் விவசாயி இளைஞர் கொலை: உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் உறவினர்கள் சாலை மறியல்!

​கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் (26) என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவருடன் இருந்த நண்பர் பிரசாந்த் (26) தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே மீட்கப்பட்ட பிரசாந்த் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கொடைக்கானல் காவல்துறையினர், ராமரின் […]

Continue Reading

22 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கடன் சுமையில் தவிப்பு; தேர்தல் வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்” – ஈசன் முருகசாமி திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் நிலம் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கல்லக்குடியில் மாபெரும் பேரணி மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். லால்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் இந்த போராட்டத்தில் ஆயிரணகணக்கான […]

Continue Reading