பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை – நடிகை .விந்தியா.

  த பாலசுப்பிரமணியம் அரியலூர் பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என அரியலூரில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை .விந்தியா. அரியலூரில் அதிமுக வேட்பாள் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து, அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:திமுக தனது கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுகவை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுவார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவார்கள் […]

Continue Reading

பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி -மு.க. ஸ்டாலின்

நியூஸ் ஜீவா பெரம்பலூர் பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி; இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்! பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள்! கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.04.2026) பெரம்பலூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்: “வாழ்ந்தவர் கோடி […]

Continue Reading

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தீவிர பிரச்சாரம்

செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் திருமதி சரண்யாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், “நாம் இருளில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். விரைவில் விடியல் வரும், விடியல் வரும் என்று நம்மை நாமே நம்ப வைத்து கொண்டு இருக்கிறோம்,” என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்ற மக்கள் ஒன்றுபட்டு, இந்தத் […]

Continue Reading

ஆட்டோவில் இருந்து விழுந்து முதியவர் பலி – ஓட்டுநர் கைது

விக்கிரமங்கலம், ஏப். 17: அரியலூர் மாவட்டம் அரியலூர் அருகே அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மனைவி அமராவதி (65), விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாபூர் கிராமத்தில் நடைபெற்ற இறப்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணிகள் ஆட்டோவில் சென்றார். அப்போது வி.கைகாட்டி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அமராவதி ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வெற்று அறிவிப்புகள், என அரியலூரில் வி கே சசிகலா சாடல்

அரியலூர், ஏப்.16:அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் வி.கே. சசிகலா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், தனது கட்சியின் வேட்பாளர் எஸ். ராஜ்குமாரை ஆதரித்து பேசிய வி.கே. சசிகலா, திமுக மற்றும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை என்றும், அவை மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகள் என்றும், அவை அனைத்தும் […]

Continue Reading

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்பு கொடிகளை ஏற்றி அறப்போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் ஜீவா பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்னாள் மண்டல அமைப்பு செயலாளர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை எதிர்த்து இன்று துறைமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசிக உறுப்பினர்களுடன் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடிகளை ஏற்றி கண்டன கோஷம் எழுப்பி அறப்போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; ​மத்திய அரசு இன்று அவசரகதியில் பாராளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள். இத்தகைய செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த […]

Continue Reading

துறையூரில் முருகப்பெருமான் உற்சவர் திருவீதி உலா.

துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழ் வருடமான ஸ்ரீ பராபவ ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு 61 வது ஆண்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தல் மற்றும் ஆண் பக்தர்கள் காவடி எடுத்தல் நிகழ்வு துறையூர் நகர ஆறுநாட்டு வேளாளர் சார்பில் நடைப்பெற்றது. காலை 6 மணிக்கு மூலவர் காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 50 குடங்களில் பால் நிரப்பப்பட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ஆண் பக்தர்கள் காவடி […]

Continue Reading

பணியில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு காவல்துறை மரியாதை

தலைப்பு: பணியில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு காவல்துறை மரியாதை   செய்தியாளர்: ஜீவா   பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், பணியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி கடந்த 14.04.2026 அன்று உயிரிழந்தார். மறைந்த ஜெயராமனின் உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் முழு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையில் மலர் வளையம் […]

Continue Reading

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியின் கூட்டாளியான காங்கிரஸ் வேட்பாளருக்கு உங்கள் ஓட்டா துறையூரில் சாட்டை துரைமுருகன் பேச்சு.

திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு சாலை ரவுண்டானா அருகே நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் துறையூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான அஸ்வத்தாமன் என்பவரின் நெருங்கிய கூட்டாளியான விச்சு என்கிற லெனின் பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார். மேலும் எம்எல்ஏ ஆகினால் கொலை குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து துறையூர் தொகுதியில் […]

Continue Reading

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

அரியலூர்,ஏப்.15 அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக வி.கைகாட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில், இரண்டரை வயது சிறுமி முதல் பள்ளி மாணவி வரை, பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அந்த அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள கஞ்சா, போதைப் பொருள்கள் […]

Continue Reading