பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு ஆ.இராசா எம்.பி. மரியாதை

செய்தியாளர் : ஜீவா பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள B. R. Ambedkar அவர்களின் சிலைக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் A. Raja எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கும் ஆ.இராசா எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பெரம்பலூர்: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (15.04.2026) நடைபெற்றன. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப. அவர்கள் இந்தப் பயிற்சி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பயிற்சி நடைபெற்ற இடங்கள் 147-பெரம்பலூர் (தனி): கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 148-குன்னம்: மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. பெரம்பலூர் தொகுதியில் […]

Continue Reading

பெரம்பலூரில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை: 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!

பெரம்பலூர் | ஏப்ரல் 15: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நான்கு முக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (ஏப்ரல் 16) மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி. அவர்களின் வழிகாட்டுதல்படியும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் […]

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க மாவட்ட மாநாடு

பெரம்பலூரில் தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க 5வது மாவட்ட மாநாடு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு நிறுவனர் ஜெயபாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், பிரவீன், சங்கர் (எ) மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆலோசகர் ஜெயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தேவேந்திர குலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் வழங்கவேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனார் மற்றும் சுந்தரலிங்கனார் சிலை செஞ்சேரி கிராமத்தில் அமைக்கவேண்டும், பெரம்பலூர் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் […]

Continue Reading

குன்னம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். பிரச்சார கூட்டத்தில் பேசிய ரவி பச்சமுத்து, தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு […]

Continue Reading

நாரணமங்கலத்தில் டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளரான டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்து, தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர். பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து பேசினார் ஜெயலெட்சுமி, தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கமளித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் […]

Continue Reading

அரியலூரில் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அரியலூர் செட்டி ஏரிக்கரை பூங்காவில் அமைந்துள்ள உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது 135 வது பிறந்த நாளை முன்னிட்டு,மதிமுக சார்பில் அரியலூர் சட்டமன்ற உறுப்பி னர் கு. சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன், நகர செயலாளர் இராம மனோகரன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி .சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை […]

Continue Reading

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் டீ தயாரிப்பில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலஅக்ரஹார பகுதியில், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பின்பு நேரடியாக டீ தயாரித்து வழங்கியும், அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்பி ஆ. இளவரசன், முன்னாள் […]

Continue Reading

குலமாணிக்கத்தில் கரும்புத் தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு  

அரியலூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் (மே) ஒன்றியம் குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில்,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ் இராஜேந்திரன் கரும்பு வெட்டும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் விவசாயப் பணி செய்து , பின்னர் விவசாயிகளிடம் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் .இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ப. இளவழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட […]

Continue Reading

செந்துறையில் குன்னம் திமுக வேட்பாளரை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அண்ணா சிலை அருகே, குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சா.சி. சிவசங்கரை ஆதரித்து, கி. வீரமணி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களையும் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் திராவிடர் […]

Continue Reading