மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சிக்கு அரியலூரில் கியூஆர் கோடு மூலம் பதிவு

அரியலூர்

அரியலூர், செப்.30- சென்னை யில் அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க, அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கியூஆர் கோடு மூலம் பதிவு செய்தனர். இதற்கான பதிவு நிகழ்ச்சி, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.மாரியம்மாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களில் காங்கிரஸ் தலைமை வழங்கிய கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்தனர். இந்த பதிவு மூலம் சென்னையில் அக்டோபர் 10-ந் தேதி நடைபெறும் “மாணவர் களின் குரல்” நிகழ்ச்சி யில் மாணவ மாணவியர்கள் பங்கேற்று, கல்வி, எதிர்காலம் மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான கருத்துகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.பூங்கொடி, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் சாய், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் கே.கவுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *