துறையூர் பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு – பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டுகோள்

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கொடி அணிவகுப்பை (Flag March) நடத்தினர். இந்த அணிவகுப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பின்னணியில் எந்தவித பதற்றமும் உருவாகாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அணிவகுப்பை முசிறி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய […]

Continue Reading

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட ஜோதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மணி தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து […]

Continue Reading

துறையூர் அருகே மீண்டும் பேருந்து விபத்து – 21 பேர் காயம் அலட்சிய அதிகாரிகள் தூங்குகிறார்களா?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடி பகுதியில் இன்று நடைபெற்ற ஆம்னி பேருந்து விபத்து, அதிகாரிகளின் செயலற்ற தன்மையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த துறையூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டமாக இருந்தாலும், இந்த விபத்து பெரிய பேரழிவாக மாறியிருக்கக் கூடிய நிலை இருந்தது. விபத்துக்குப் […]

Continue Reading

துறையூரில் சித்ரா பௌர்ணமி விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

திருச்சி மாவட்டம் துறையூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விநாயகர் தெருவில் அமைந்துள்ள செல்வ மாரியம்மன் திருக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆத்தூர் சாலையில் உள்ள காவல் தாய் அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம், “ஓம் சக்தி பராசக்தி” எனும் பக்தி கோஷங்களுடன் பாலக்கரை, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி […]

Continue Reading

துறையூர் அருகே கால்நடை உதவி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேங்கடத்தனூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்த கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் (36) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த 4 மாதங்களாக துறையூர் அருகே வேங்கடத்தனூர் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக […]

Continue Reading

துறையூர் -குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால், பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக துறையூர்–பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தகவல் அறிந்து வந்த துறையூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். […]

Continue Reading

துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2,10,685 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,81,917 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 86,007 பேர், பெண்கள் 95,890 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 20 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 86.35 ஆக பதிவாகியுள்ளது. மொத்தம் 297 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, நாள் […]

Continue Reading

துறையூரில் முருகப்பெருமான் உற்சவர் திருவீதி உலா.

துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழ் வருடமான ஸ்ரீ பராபவ ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு 61 வது ஆண்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தல் மற்றும் ஆண் பக்தர்கள் காவடி எடுத்தல் நிகழ்வு துறையூர் நகர ஆறுநாட்டு வேளாளர் சார்பில் நடைப்பெற்றது. காலை 6 மணிக்கு மூலவர் காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 50 குடங்களில் பால் நிரப்பப்பட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ஆண் பக்தர்கள் காவடி […]

Continue Reading

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியின் கூட்டாளியான காங்கிரஸ் வேட்பாளருக்கு உங்கள் ஓட்டா துறையூரில் சாட்டை துரைமுருகன் பேச்சு.

திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு சாலை ரவுண்டானா அருகே நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் துறையூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான அஸ்வத்தாமன் என்பவரின் நெருங்கிய கூட்டாளியான விச்சு என்கிற லெனின் பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார். மேலும் எம்எல்ஏ ஆகினால் கொலை குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து துறையூர் தொகுதியில் […]

Continue Reading

த.மங்கபட்டி சமத்துவபுர முறைகேடு: தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள் – அதிமுக வேட்பாளர் நேரில் பேச்சுவார்த்தை!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தகுதியற்றவர்களுக்கு சமத்துவபுர வீடுகள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்பிலியபுரம் ஒன்றியம், த.மங்கபட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எனினும், இந்த சமத்துவபுரத்திற்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஏற்கனவே சொந்த வீடும், விவசாய […]

Continue Reading