34 கிலோ எடையில் $100 மில்லியன் மதிப்புள்ள முத்து! 10 ஆண்டுகள் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த பிலிப்பைன்ஸ் மீனவர்

  ஓர் வியப்பூட்டும் உண்மைச் சம்பவம்! உலகிலேயே கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்று, சுமார் 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஒரு சாதாரண மரக்கட்டிலின் அடியில் ஒளிந்திருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த இந்த சுவாரசியமான உண்மைச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. ### நங்கூரத்தில் சிக்கிய அதிர்ஷ்டம்! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவன் (Palawan) தீவுப் பகுதியைச் சேர்ந்த ஏழை மீனவர் ஒருவர், கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்கச் […]

Continue Reading

திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செய்தியாளர்:அருண் 90959-25936   திருச்சி, ஜூலை 29: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை புதன்கிழமை நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் […]

Continue Reading

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்

செய்தியாளர்:அருண் 90959-25936 திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) அலுவலக வளாகத்தில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம், சுகாதாரக் கேடு […]

Continue Reading

திருச்சியில் வீட்டு காவலில் விவசாயி அய்யாக்கண்ணு; பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி

செய்தியாளர் : அருண் 90959 25936 விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திட்டமிடப்பட்டிருந்தது. விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுத்துவரும் கர்நாடக அரசிடம் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]

Continue Reading

திருச்சி காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

செய்தியாளர் : அருண் : 90959 25936  திருச்சி நகரின் முக்கிய புனித நீராடும் தலமான அம்மா மண்டபம் அருகே காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு நீர் திறக்கப்படாததால், திருச்சி பகுதிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது குறைந்தளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றின் பல […]

Continue Reading

திருச்சியில் சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். காவல்துறை, […]

Continue Reading

துறையூர் அருகே இமயம் கல்லூரியில் தடகளப் போட்டி; 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான இடையேயான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. போட்டிகளுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முசிறி டிஎஸ்பி முத்துக்குமார், கல்லூரி தாளாளர் ஆண்டி மற்றும் இயக்குநர் ஜனார்த்தனன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி […]

Continue Reading

துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்ட என்.தன்ராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக, கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ள என்.தன்ராஜ் தலைமையில், சிங்களாந்தபுரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், துறையூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் […]

Continue Reading

துறையூரில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள ஆவணங்கள் வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. மேலும், பழங்குடியின மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்து, அவற்றை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Continue Reading

துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மைத் துறையின் சார்பில் இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading