அரியலூரில் சாலை விரிவாக்கம் சர்ச்சை மக்கள் கடும் எதிர்ப்பு

அரியலூர், ஏப்ரல் 25: அரியலூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. விளான்குடி – கைகாட்டி பகுதிகளை இணைக்கும் முக்கியத் தார்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளின் போது, சாலையோரங்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் மற்றும் பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மரங்களை அகற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கைகாட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையால் […]

Continue Reading

பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை – நடிகை .விந்தியா.

  த பாலசுப்பிரமணியம் அரியலூர் பெண்களுக்கு, தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என அரியலூரில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை .விந்தியா. அரியலூரில் அதிமுக வேட்பாள் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து, அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:திமுக தனது கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுகவை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுவார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒன்று கூறுவார்கள் […]

Continue Reading

ஆட்டோவில் இருந்து விழுந்து முதியவர் பலி – ஓட்டுநர் கைது

விக்கிரமங்கலம், ஏப். 17: அரியலூர் மாவட்டம் அரியலூர் அருகே அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மனைவி அமராவதி (65), விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாபூர் கிராமத்தில் நடைபெற்ற இறப்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணிகள் ஆட்டோவில் சென்றார். அப்போது வி.கைகாட்டி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அமராவதி ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வெற்று அறிவிப்புகள், என அரியலூரில் வி கே சசிகலா சாடல்

அரியலூர், ஏப்.16:அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் வி.கே. சசிகலா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், தனது கட்சியின் வேட்பாளர் எஸ். ராஜ்குமாரை ஆதரித்து பேசிய வி.கே. சசிகலா, திமுக மற்றும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை என்றும், அவை மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகள் என்றும், அவை அனைத்தும் […]

Continue Reading

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

அரியலூர்,ஏப்.15 அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக வி.கைகாட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில், இரண்டரை வயது சிறுமி முதல் பள்ளி மாணவி வரை, பாலியல் வன்கொடுமைக்கும் கொலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அந்த அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள கஞ்சா, போதைப் பொருள்கள் […]

Continue Reading

குன்னம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். பிரச்சார கூட்டத்தில் பேசிய ரவி பச்சமுத்து, தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு […]

Continue Reading

அரியலூரில் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அரியலூர் செட்டி ஏரிக்கரை பூங்காவில் அமைந்துள்ள உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது 135 வது பிறந்த நாளை முன்னிட்டு,மதிமுக சார்பில் அரியலூர் சட்டமன்ற உறுப்பி னர் கு. சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன், நகர செயலாளர் இராம மனோகரன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி .சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை […]

Continue Reading

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் டீ தயாரிப்பில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலஅக்ரஹார பகுதியில், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பின்பு நேரடியாக டீ தயாரித்து வழங்கியும், அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்பி ஆ. இளவரசன், முன்னாள் […]

Continue Reading

குலமாணிக்கத்தில் கரும்புத் தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு  

அரியலூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் (மே) ஒன்றியம் குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில்,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ் இராஜேந்திரன் கரும்பு வெட்டும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் விவசாயப் பணி செய்து , பின்னர் விவசாயிகளிடம் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் .இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ப. இளவழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட […]

Continue Reading

செந்துறையில் குன்னம் திமுக வேட்பாளரை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அண்ணா சிலை அருகே, குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சா.சி. சிவசங்கரை ஆதரித்து, கி. வீரமணி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களையும் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் திராவிடர் […]

Continue Reading